காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தங்கம் வென்றார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டை போட்டியில் விகாஸ் கிரிஷன் இந்தியாவுக்கு 25வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார். #CommonWealthGames2018 #CWG2018 #VikasKrishan
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தங்கம் வென்றார்
Published on

கோல்ட் கோஸ்ட்:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 10-வது நாளாக ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். இன்று குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கேமரூன் வீரரை தோற்கடித்தார். இது இந்தியாவுக்கு கிடைக்கும் 25வது தங்கப்பதக்கமாகும்.

இதன்மூலம் இந்தியா 25 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. #CWG2018 #VikasKrishan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com