ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்
விஜயகாந்த்
Published on

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதற்கு முன் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் பற்றி மத்திய அரசு தெளிவான விளக்கங்களை விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த திட்டத்தால் டெல்டா பகுதியில் இருக்கும் விவசாய நிலங்கள் அழிந்து போகும் என்ற ஒரு அச்சுறுத்தல் விவசாயிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இருக்கிறது. அதனால் விவசாயிகளின் அச்சத்தை போக்கும் வண்ணம் விளக்கம் கொடுக்க வேண்டும்.

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்காக தான். அதனால் மக்கள் வரவேற்புடன் ஒரு திட்டம் வரும்பொழுது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் திட்டமாக இருக்கும்.

எனவே மத்திய அரசு இத்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com