தே.மு.தி.க. சார்பில் 10-ந் தேதி விஜயகாந்த் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னையில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி மாலை 6 மணிக்கு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். #DMDK #Vijayakanth
தே.மு.தி.க. சார்பில் 10-ந் தேதி விஜயகாந்த் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
Published on

சென்னை:

தே.மு.தி.க. தலைமை கழகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர். வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் சென்னையில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com