ராக்கெட்டுகளை ஏவி தீபாவளி வாழ்த்து? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி

மலைப்பகுதியை ராக்கெட்டுகள் குறிவைத்து தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதன் உண்மை பின்னணியை பார்ப்போம்.
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
Published on

இந்திய ராணுவம் சார்பில் பாகிஸ்தானுக்கு தீபாவளி வாழ்த்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. வைரல் வீடியோவில் மலைப்பகுதி ஒன்றில் ராக்கெட்டுகள் ஏவப்படும் அதிரடி காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் அது நான்கு மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இது இந்திய ராணுவம் மேற்கொண்ட ராக்கெட் சோதனையாகும். இதில் இந்திய ராணுவத்தின் பி.எம்.-21 கிராட் ராக்கெட் நாஷிக் அருகே சோதனை செய்யப்பட்டது.

இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு ராக்கெட்டுகளை ஏவி தீபாவளி வாழ்த்து சொன்னதாக கூறும் போலி பதிவினை சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இதே வீடியோவினை தனியார் செய்தி நிறுவனமும் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ராணுவம் பி.எம்.-21 கிராட் நாஷிக் அருகே சோதனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வீடியோவில் ஆறு லாஞ்சர்கள் பல்வேறு ராக்கெட்டுகளை நொடிகளில் ஏவும் அதிரடி காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

இதே செய்தியினை பல்வேறு இதர செய்தி நிறுவனங்கள், வலைத்தளங்களும் வெளியிட்டுள்ளன. சில செய்திகளில் இந்திய ராணுவம் மல்டி-பாரெல் ராக்கெட் லாஞ்சர்களை சோதனை செய்ததாக குறிப்பிட்டு இருக்கின்றன.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com