துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார். தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம், ஆளுநர் வித்யாசாகர் வெங்கையா நாயுடுவை வரவேற்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார்
Published on

சென்னை:

இந்திய துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. சார்பாக நிறுத்தப்பட்ட வெங்கையா நாயுடு வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து, வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். 

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வெங்கையா நாயுடு, முதல்முறையாக இன்று சென்னை வந்தார். சென்னை விமானநிலையத்தில் வெங்கையா நாயுடுவை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரவேற்றனர். அப்போது பா.ஜ.க. தலைவர்கள் தமிழிசை சௌந்தர்யராஜன், இல.கணேசன், எம்.பி.க்கள் நவநீத கிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னையில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடைபெற உள்ள விழாவை வெங்கையா நாயுடு தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர், அண்ணா பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக மத்திய பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com