கவுதமாலா, பனாமா, பெரு நாடுகளில் சுற்றுப்பயணம் - துணை ஜனாதிபதி புறப்பட்டு சென்றார்

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக கவுதமாலா, பனாமா, பெரு நாடுகளுக்கு வெங்கையா நாயுடு இன்று புறப்பட்டு சென்றார். #VenkaiahNaidu #VicePresidentofIndia
கவுதமாலா, பனாமா, பெரு நாடுகளில் சுற்றுப்பயணம் - துணை ஜனாதிபதி புறப்பட்டு சென்றார்
Published on

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வெங்கையா நாயுடு  முதல்முறையாக வருகிற 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மூன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

முதலில் கவுதமாலா நாட்டுக்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதைத்தொடர்ந்து 7-ம் தேதி பனாமா நாட்டுக்கு செல்கிறார். அங்கு பனாமா ஜனாதிபதி ஜுவான் கார்லோஸ் வரேலா, துணை ஜனாதிபதி மற்றும் வெளியுறவு மந்திரி இசபெல் செயிண்ட் மாலோ ஆகியோரை சந்திக்கிறார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது கட்ட பயணமாக பனாமாவில் இருந்து பெரு நாட்டுக்கு செல்கிறார். அங்கு பெரு நாட்டின் ஜனாதிபதி மார்டின் விஸ்காரா, துணை ஜனாதிபதி மெர்சிடஸ் அரோஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார். #VenkaiahNaidu #VicePresidentofIndia

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com