கவுதமாலா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பனாமா சென்றடைந்தார் வெங்கையா நாயுடு

அரசுமுறை சுற்றுப்பயணமாக மத்திய அமெரிக்க நாடுகளுக்கு சென்றுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று பனாமா சென்றடைந்தார். #VenkaiahNaidu #Panama
கவுதமாலா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பனாமா சென்றடைந்தார் வெங்கையா நாயுடு
Published on

பனாமா சிட்டி:

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வெங்கையா நாயுடு, முதல் முறையாக மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளான கவுதமாலா, பனாமா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் கவுதமாலா சென்ற அவர் ஜனாதிபதி ஜிம்மி மொரலெசை சந்தித்து பேசினார். 

இரு தலைவர்களும் இரு நாட்டுக்கு இடையேயான வியாபாரம் மற்றும் பொருளாதாரத்தை வளர்ப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அது குறித்து உடன்படிக்கை செய்துகொண்டனர். குறிப்பாக இருதரப்பு உறவுகளுக்கு இடையேயான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், கவுதமாலாவை சர்வதேச சோலார் திட்டத்தில் இணையுமாறு இந்தியா அழைப்பு விடுத்தது. கவுதமாலா பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை வெங்கையா நாயுடு பனாமா சென்றடைந்தார். அங்கு அவரை அந்நாட்டு வெளியுறவு மந்திரி வரவேற்றார்.

பனாமா அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச உள்ள வெங்கையா நாயுடு, இரு நாடுகள் உறவு குறித்து விவாதிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. #VenkaiahNaidu #Panama

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com