5 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்தியா திரும்பினார்

கவுதமலா, பெரு, பனாமா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்தியா திரும்பினார். #VenkaiahNaidu #IndiaArrive
5 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்தியா திரும்பினார்
Published on

புதுடெல்லி:

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வெங்கையா நாயுடு முதல்முறையாக கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

முதல் கட்டமாக கவுதமலா சென்ற வெங்கையா நாயுடு, அந்நாட்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

அதைத்தொடர்ந்து பனாமா நாட்டுக்கு சென்ற அவர், பனாமா ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, வெளியுறவு மந்திரி ஆகியோரை சந்தித்தார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இறுதியாக, பெரு நாட்டுக்கு சென்ற அவர், அந்நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவுதமலா, பெரு, பனாமா ஆகிய நாடுகளில் மேற்கொண்ட ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு இந்தியா திரும்பினார். டெல்லி வந்த அவரை அதிகாரிகள் கைகுலுக்கி வரவேற்றனர். #VenkaiahNaidu #IndiaArrive

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com