வேப்பேரியில் கால்நடை டாக்டர் தற்கொலை முயற்சி

காதல் கை கூடாததால் கால்நடை டாக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கால்நடை மருத்துவ கல்லூரி விடுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேப்பேரியில் கால்நடை டாக்டர் தற்கொலை முயற்சி
Published on

வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தவர் இளைய ராஜா (22). 5 வருடம் கால்நடை டாக்டர் படிப்பை முடித்து விட்ட இவர், வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். இவருடைய இளம்வயது நண்பர் பாரதிராஜா.

அப்போது இளையராஜா பிளேடால் தனது இரண்டு கைகளின் மணிக்கட்டு பகுதியையும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

ரத்தம் சொட்டிய நிலையில் துடித்துக் கொண்டிருந்த தனது நண்பனை கண்டு பாரதிராஜா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வேப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் கால்நடை டாக்டர் படிப்பை முடித்த இளையராஜா சிறு வயது முதல் தனது ஊரில் உள்ள ஒரு பெண்ணை காதலித்ததாகவும், காதல் கை கூடாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. காதல் கை கூடாததால் கால்நடை டாக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கால்நடை மருத்துவ கல்லூரி விடுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com