கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஷிவப்பா காலமானார்

கர்நாடக மாநிலத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் பி.பி.ஷிவப்பா இன்று காலமானார்.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஷிவப்பா காலமானார்
Published on

பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் பி.பி.ஷிவப்பா இன்று காலமானார். அவருக்கு வயது 88.

கர்நாடக மாநிலத்தில், ஆரம்ப காலங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் பி.பி.ஷிவப்பா. ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மூன்று முறை கட்சியின் மாநில தலைவராகவும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றியுள்ளார்.

88 வயதான இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஷிவப்பா, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

ஷிவப்பா மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com