விம்பிள்டன் தோல்வி: கர்ப்பிணி தங்கை செரீனாவிற்கு வீனஸின் உருக்கமான தகவல்

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த வீனஸ் வில்லியம்ஸ், கர்ப்பிணியான தனது தங்கைக்கு உருக்கமான தகவலை தெரிவித்துள்ளார்
விம்பிள்டன் தோல்வி: கர்ப்பிணி தங்கை செரீனாவிற்கு வீனஸின் உருக்கமான தகவல்
Published on

இந்த போட்டிக்கு முன்பு, என தங்கை இல்லாத நேரத்தில் அவர் வெற்றி பெறக்கூடிய இந்த சாம்பியன் பட்டத்தை நான் வெல்வேன். முகுருசாவை எப்படி வீழ்த்த வேண்டும் என்று செரீனாவிடம் ஆலோசனைக் கேட்பேன் என்று வீனஸ் வில்லியம்ஸ் கூறியிருந்தார்.

ஆனால், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 23 வயதாகும் முகுருசாவின் அபார ஆட்டத்திற்கு முன் 37 வயதாகும் வீனஸ் வல்லியம்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5-7, 0-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார்.

தோல்விக்குப்பின் தனது கர்ப்பிணி தங்கையான செரீனாவிற்கு உருக்கனமாக தகவலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் உன்னை தவற விடுகிறேன் செரீனா. நீ செய்வதை நான் என்னுடைய சிறந்த முயற்சியால் செய்ய முயன்றேன். ஆனால், அதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com