ராகுல் காந்தி மீதான உரிமை பிரச்சினை பற்றி ஆய்வு - வெங்கையா நாயுடு தகவல்

பாராளுமன்றத்தின் மேல் சபையில் கொடுக்கப்பட்ட ராகுலுக்கு எதிரான உரிமை பிரச்னை தொடர்பான நோட்டீஸ் பற்றி ஆய்வு செய்து முடிவு எடுப்பேன் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி மீதான உரிமை பிரச்சினை பற்றி ஆய்வு - வெங்கையா நாயுடு தகவல்
Published on

பாராளுமன்றத்தின் மேல் சபையில் கொடுக்கப்பட்ட ராகுலுக்கு எதிரான உரிமை பிரச்னை தொடர்பான நோட்டீஸ் பற்றி ஆய்வு செய்து முடிவு எடுப்பேன் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லி மேல்-சபை நேற்று கூடியபோது, மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஹெக்டே வருத்தம் தெரிவித்து இருப்பதாக பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி விஜய் கோயல் விளக்கம் அளித்தார். அதன்பிறகும் காங்கிரசாரின் அமளி நீடித்ததால், காலை நேரத்திலேயே சபை 2 தடவை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், சபை கூடியபோது, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் பெயரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தீய நோக்கத்துடன் திரித்து கூறி இருப்பதாகவும், அதனால், ராகுலுக்கு எதிராக உரிமை பிரச்சினை நோட்டீஸ் கொடுத்திருப்பதாகவும் பா.ஜனதா உறுப்பினர் புபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com