தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - வெங்கையா நாயுடு பேச்சு

சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaidu
தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - வெங்கையா நாயுடு பேச்சு
Published on

சென்னை:

சென்னையில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மாலை சென்னைக்கு வந்தார்.

தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின்னர், கிண்டியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற வெங்கையா நாயுடு பேசியதாவது:

தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பிறகு மற்ற மொழியை கற்றுக் கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற கலாசாரம் மற்றும் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். பிரிட்டிஷ் கல்வி முறையால் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் திறமை வாய்ந்தவர்கள் குறைவாக உள்ளனர். நாடாளுமன்றம் இருக்கிறது. ஆனால் இயங்குகிறதா, இல்லையா என்பது மக்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 #VenkaiahNaidu #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com