டிரம்புடன் மரியாதைக்குரிய பேச்சுவார்த்தைக்கு தயார் - வெனிசுலா அதிபர்

டிரம்புடன் மரியாதைக்குரிய பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர்  நிகோலஸ் மதுரோ
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ
Published on

எண்ணெய் வளமிக்க தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வலுத்து வருகின்றன.

வெனிசுலாவின் நாடாளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை இடைக்கால அதிபராக பிரகடனம் செய்து கொண்டுள்ளார். தனது நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு காரணம் என அதிபர் நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும் இந்த விவகாரத்தில் அவர் ஜனாதிபதி டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com