காவேரிப்பட்டணத்தில் வாகன விபத்தில் ஜோதிடர் பலி

காவேரிப்பட்டணத்தில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் ஜோதிடர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து
விபத்து
Published on

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் ஒன்றியம் வேலம்பட்டியை அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் குட்டஎம்.ஜி.ஆர். (வயது 46). ஜோதிடம் பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் மனைவி மாதம்மாள் (வயது36) மற்றும் மருமகளுடன் இருசக்கர மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது கீங்கன்கொட்டாய் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது எதிரேவந்த பிக்கப்வேனில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குட்டஎம்.ஜி.ஆர். உயிரிழந்தார். அவருடைய மனைவி மாதம்மாள் மற்றும் மருமகள் ஆகியோர் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  

விபத்து ஏற்பட்டதை அடுத்து பிக்கப்வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து நாகரசம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com