

அவனியாபுரம்:
சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது 2ஜி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கனிமொழி, ராசா ஆகியோர் நிரபராதிகள் என வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு வர வேற்கத்தக்கது. இதனால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். “அநீதி வீழும், அறம் வெல்லும்“ என்று கலைஞர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக பணியாற்றி உள்ளோம். கடந்த முறை ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தலின்போது ரூ.89 கோடி பட்டுவாடா செய்ததற்கான கடிதம் சிக்கியது. தற்போது அ.தி.மு.க.வினர் 90 சதவீதம் பணப்பட்டுவாடா செய்துள்ளனர்.
இதை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அநீதியை வென்று தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.