உத்தரகாண்ட் வெள்ளம்: இன்று 12 உடல்கள் மீட்பு- இதுவரை 50 பேர் பலி

உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மீட்புப்படை தெரிவித்துள்ளது.
மீட்புக்குழு
மீட்புக்குழு
Published on

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் பனிப்பாறை உடைந்து உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, நீர்மின் திட்ட கட்டமைப்புகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரைக் காணவில்லை.

நீர்மின் நிலைய சுரங்கம் வெள்ளத்தில் மூழ்கியது. சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புப்படை, இந்தோ-தீபத் எல்லை பாதுகாப்பு போலீசார் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இன்று 12 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 5 பேர் உடல் ரைனி கிராமத்திலும், 5 பேர் உடல் தபோவன் சுரங்கத்திலும் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 

இச்சம்பவத்தின்போது 200-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com