டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து உத்தரகாண்ட் முதல்-மந்திரி வீடு திரும்பினார்

கொரோனா தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த உத்தரகாண்ட் முதல்-மந்திரி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்
திரிவேந்திர சிங் ராவத்
திரிவேந்திர சிங் ராவத்
Published on

டேராடூன்:

உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ராவத்துக்கு கடந்த 18-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு சில நாட்களிலேயே நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. இதனால் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 27-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சை மற்றும் பல்வேறு பரிசோதனைகளுக்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 28-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பரிசோதனைகள் மற்றும் தீவிர சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. இதன் பலனாக அவர் குணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

எனினும் அவர் டெல்லியில் உள்ள வீட்டில் சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என அவரது மருத்துவர் என்.எஸ்.பிஷ்ட் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com