உத்தரகாண்ட் வெள்ளம்: 206 பேர் காணாமல் போனதில், இதுவரை 70 உடல்கள் மீட்பு

உத்தரகாண்ட் சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காணாமல் போனவர்களில் இதுவரை 70 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் வெள்ளம் மீட்புப்பணி (கோப்புப்படம்)
உத்தரகாண்ட் வெள்ளம் மீட்புப்பணி (கோப்புப்படம்)
Published on: 

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் பனிப்பாறை உடைந்து உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, நீர்மின் திட்ட கட்டமைப்புகள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரைக் காணவில்லை.

நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் வேலைப்பார்த்த பணியாளர்களில் பலர் தண்ணீரில் மூழ்கியும், மண்ணில் புதைந்தும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

சாமோலி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்திற்கு 206 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களில் இதுவரை 70 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. 29 பேர் உடல்கள் தபோவன் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டதாக சாமோலி போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com