உத்தர பிரதேச சுகாதாரத்துறை இணை அமைச்சருக்கு கொரோனா தொற்று

உத்தர பிரதேச சுகாதாரத்துறை இணை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அமைச்சர் அதுல் கார்க்
அமைச்சர் அதுல் கார்க்
Published on

லக்னோ:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் பலர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அவ்வகையில் உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் அதுல் கார்க், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 15ம் தேதி தனக்கு பிசிஆர் சோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இல்லை என்றும், நேற்று இரவு ரேபிட் டெஸ்ட் செய்தபோது பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறி உள்ளார். அத்துடன், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பினால் கமல் ராணி வருண், சேத்தன் சவுகான் ஆகிய இரண்டு அமைச்சர்கள் சமீபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com