காமன்வெல்த்தில் ஒரு தங்கம் கூட இல்லை- உசைன் போல்ட் அப்செட்

காமன்வெல்த் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீரர்கள் ஒரு தங்கம் கூட கைப்பற்றாததால் உசைன் போல்ட் கடும் அப்செட் ஆகியுள்ளார். #CWG2018 #GC2018
காமன்வெல்த்தில் ஒரு தங்கம் கூட இல்லை- உசைன் போல்ட் அப்செட்
Published on

உசைன் போல்ட் அல்லாத ஜமைக்கா அணியால் ஓட்டப் பந்தயத்தில் ஜொலிக்க முடியுமா? என்ற ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்தது. இந்த கேள்விகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜமைக்கா அணி ஒரு தங்கம் கூட கைப்பற்றவில்லை. இதனால் உசைன் போல்ட் அப்செட் ஆகியுள்ளார். அவர் தனது சமூக இணையத்தள பகுதியில் ‘‘ஓட்டப்பந்தயத்தை பார்த்த பிறகு எனக்குள்ளே சில கேள்விகளை எழுப்பியுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா சார்பில் யோகன் பிளேக் கலந்து கொண்டார். இவரை இரண்டு தென்ஆப்பிரிக்கா வீரர்கள் பின்னுக்குத் தள்ளினார்கள். 2011-ம் ஆண்டு தவறுதலாக ஓட்டத்தை தொடங்கியதாக போல்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, பிளேக் தங்க பதக்கம் வென்றிருந்தார். ஆண்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவின் எதிரியாக இருக்கும் டிரினிடாட் அண்டு டொபாகோ வீரர் ஜெரீம் ரிச்சார்ட் தங்கம் வென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com