அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை இன்று சந்தித்து பேசினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் முதல் பிரதிநிதியான வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த அவரை அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இன்று காலை மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்றார். அங்கு அவர் மகாத்மா காந்தி சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, ரெக்ஸ் டில்லர்சன் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார். அவரை சுஷ்மா சுவராஜ் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின்னர், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com