அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
Published on

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் முதல் பிரதிநிதியாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த அவரை அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இன்று காலை மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்றார். அங்கு அவர் மகாத்மா காந்தி சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து ரெக்ஸ் டில்லர்சன் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று மாலை சந்தித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com