மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்கா இரங்கல்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். #Vajpayee #VajpayeePassesAway #AtalBihariVajpayee
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அமெரிக்கா இரங்கல்
Published on

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (93) டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா சார்பில் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, 

வாஜ்பாயை இழந்து வாடும் இந்தியாவுக்கு, நானும், அமெரிக்க மக்களும் உறுதுணையாக இருப்போம் என்றும், அவரது மறைவு பெரும் துயரத்தை உண்டாக்கியுள்ளது. அவரது மறைவில் வாடும் இந்தியாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவரது ஆட்சிகாலம் முதல் தற்போது வரை இரு நாடுகளுக்கிடையேயான உறவு சிறப்பாக இருந்து வருகிறது. அவரது நோக்கமே, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்கு காரணமாக இருந்தது. 

இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டுறவுக்கு, அவரது ஜனநாயக பங்குகள் மூலம் அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக பாதுகாப்பே உதாரணம் என்று அவர் கூறியுள்ளார். #Vajpayee #VajpayeePassesAway #AtalBihariVajpayee

X

Maalai Malar
www.maalaimalar.com