அமெரிக்க பாதுகாப்பு செயலர் இந்தியா வருகை: பிரதமருடன் இன்று சந்திப்பு

அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலர் இந்தியா வருகை: பிரதமருடன் இன்று சந்திப்பு
Published on

புதுடெல்லி:

அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவரை இந்திய உயரதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

தெற்காசியாவில் அமெரிக்காவின் உற்ற நட்பு நாடாக இந்தியா உள்ளதாகவும், தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் இந்தியா ஆதரவு அளித்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்காக இந்தியா சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த ஆப்கானிஸ்தான் கொள்கையை இந்தியா கருத்து வேறுபாடின்றி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com