அமெரிக்காவில் 50 பெண்களுடன் நீதிபதி ‘செக்ஸ்’ லீலை

அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாண கவர்னர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஓ நெய்ல், 50 பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளதாக பேஸ்புக் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 50 பெண்களுடன் நீதிபதி ‘செக்ஸ்’ லீலை
Published on

சிகாகோ:

அமெரிக்காவில் உள்ள ஒகியோ மாகாணத்தை சேர்ந்தவர் ஓ நெய்ல். இவர் ஓகியோ சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஆக பணிபுரிகிறார்.

இவர் ஒகியோ மாகாண கவர்னர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆளும் கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் மேரி டெய்லர் களம் இறங்கயுள்ளார்.

தற்போது பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், நீதிபதியுமான ஓ நெய்ல் ‘பேஸ்புக்‘ இணையதளத்தில் தன்னைப் பற்றிய சுய விமர்சனத்துடன் நூதன பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளில் நான் 50 அழகிய மிகவும் கவர்ச்சிகரமான பெண்களுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்திருக்கிறேன். அவர்களில் யாரையும் குறிப்பாக தெரிவிக்க முடியாது.

தொடக்கத்தில் மிக அழகிய பெண்ணை காதலித்தேன். அதுவே எனது முதல் காதலாகும். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அது பாதியில் முடிந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

அவரது அக்கருத்துக்கு இவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் மேரி டெய்லர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விமர்சனமும் செய்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது ‘செக்ஸ்’ குற்றங்கள் பெருகி வருகின்றன. ராணுவத்திலும் இத்தகைய குற்றங்கள் பெருகி வருவதாக தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை அதாவது 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் ‘செக்ஸ்’ குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கடற்படையில் 4,788 வழக்குகளும், விமானப்படையில் 8,876 வழக்குகளும் ராணுவத்தில் 3,400 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com