பாலியல் குற்றச்சாட்டில் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இருவர் ராஜினாமா

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் முறைகேடான உரையாடல் புகாரில் செனட் உறுப்பினர் அல் பிராங்கென் மற்றும் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் ட்ரெண்ட் ப்ராங்ஸ் ஆகிய இருவரும் ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர்.
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க காங்கிரசில் (பாராளுமன்றம்) செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் செனட் உறுப்பினராக உள்ள அல் பிராங்கன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பிராங்கன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை சந்திக்க வேண்டும் என ஜனநாயக கட்சியிலேயே எதிர்ப்புக்குரல் எழுந்தது.

இதனையடுத்து, இந்த வார இறுதியில் பதவி விலகுவேன் என்று அவர் அறிவித்துள்ளார். பிராங்கன் தனது ராஜினாமாவை அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஆளும் குடியரசு கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக உள்ள ட்ரெண்ட் பிராங்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அலுவலக பெண் ஊழியரிடம் முறைகேடாக தொலைபேசியில் உரையாடியது குறித்து பிரதிநிதிகள் சபை உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிட்ட சிறிது நேரத்திலேயே பிராங்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜனநாயக கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஜான் கான்யெர்ஸ், பாலியல் குற்றச்சாட்டில் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அரசியல் தலைவர்கள் பாலியல் குற்றச்சாட்டில் பதவி விலகுவது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com