கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி - அமெரிக்க ராணுவ மந்திரி வருகை ரத்து

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மார்க் எஸ்பர்
மார்க் எஸ்பர்
Published on

புதுடெல்லி:

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு தற்போது வரை உலகம் முழுவதும் 4  ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் உயிர்ப்பலியை வாங்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 31 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதேபோல், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் மார்ச் 15,16 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய முடிவாகி இருந்தது. தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்க் எஸ்பரின் வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

மேலும், இந்தியாவில் நடைபெற இருந்த ஆசிய பாதுகாப்பு மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மாநாடு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com