பிரபல ஹாலிவுட் நகைச்சுவை கலைஞர் ஜெர்ரி லூவிஸ் மரணம்

ஹாலிவுட் திரையுலகில் அசைக்கமுடியாத காமெடி நடிகராக வலம் வந்த ஜெர்ரி லூவிஸ் (91) லாஸ் வேகாஸில் உள்ள தனது இல்லத்தில் முதுமை காரணமாக காலமானார்.
பிரபல ஹாலிவுட் நகைச்சுவை கலைஞர் ஜெர்ரி லூவிஸ் மரணம்
Published on

ஹாலிவுட் திரையுலகில் அசைக்கமுடியாத காமெடி நடிகராக வலம் வந்த ஜெர்ரி லூவிஸ் (91) லாஸ் வேகாஸில் உள்ள தனது இல்லத்தில் முதுமை காரணமாக காலமானார்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 1926-ம் ஆண்டு பிறந்த ஜெர்ரி லூவிஸ் ஹாலிவுட் உலகில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். நடிகராக மட்டுமல்லாது கதாசிரியராகவும் விளங்கிய ஜெர்ரி லூவிஸ், சக நடிகர் டீன் மார்டினுடன் இணைந்து காமெடி தொடர்களை நடத்தியுள்ளார்.

ஜெர்ரி லூவிஸ் நடத்திய காமெடி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவையாகும். தி நாட்டி புரபெஸ்ஸர், தி பெல் பாய் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஜெர்ரி லூவிஸ் காமெடியால் பெரும் வெற்றிகளை பெற்றது. இந்நிலையில், லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வந்த ஜெர்ரி லூவிஸ் (91) வயோதிகம் காரணமாக அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.

ஜெர்ரி லூவிஸ் மரணதிற்கு பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com