ஷாஜஹான் உருஸ் - தாஜ் மஹாலை பார்வையிட 3 நாள் இலவச அனுமதி

மொகலாய மன்னர் ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை மூன்று நாட்களுக்கு இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #ShahjahanUrs #TajMahal #TajMahalFreeentry
ஷாஜஹான் உருஸ் - தாஜ் மஹாலை பார்வையிட 3 நாள் இலவச அனுமதி
Published on

ஆக்ரா:     

டெல்லி அருகேயுள்ள ஆக்ரா நகரில் யமுனை ஆற்றங்கரையில் தாஜ் மஹால் என்ற சலவைக்கல் காவியத்தை மனைவி மும்தாஜின் நினைவாக 17-ம் நூற்றாண்டில் உருவாக்கிய மொகலாய மன்னர் ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் ‘உருஸ் விழா’ நடத்தப்பட்டு அவரது சமாதியில் மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஷாஜஹானின் 319-வது பிறந்தநாளையொட்டி வழக்கம்போல் இந்த ஆண்டும் அவரது சமாதியில் 3 நாட்கள் ‘உருஸ் விழா’ கொண்டாடி மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி, வரும் ஏப்ரல் மாதம் 2,3 தேதிகளில் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரையிலும், 4-ம் தேதி நாள் முழுவதும் பொதுமக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.  #ShahjahanUrs #TajMahal #TajMahalFreeentry  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com