

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே மற்றும் கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் நிற மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே விலை ரூ.1,59,677 மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் விலை ரூ.2,05,213 (ஆன்-ரோடு, சென்னை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நிறங்களில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ஸ்போர்ட் அழகிய மேட் ஃபினிஷ் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் புதிய ஓட்டுநர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய கன்மெட்டல் கிரே மற்றும் ஸ்டெல்த் பிளாக் நிற மாடல்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 18-ம் தேதி துவங்குகிறது. இவற்றின் விநியோகம் விரைவில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய மாடல்களில் ABS இடம்பெறவில்லை, இதனால் ABS வசதி ஏற்றுமதி செய்யப்படும் மாடல்களில் மட்டும் வழங்கப்படலாம்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ABS கட்டாயப்படுத்தப்பட இருக்கும் நிலையில், இவற்றுக்கான விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாசிக் 350 மாடலில் 346சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின், 19.8 bhp மற்றும் 28 Nm செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
சக்சதிவாய்ந்த கிளாசிக் 500 மாடலில் 499 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் 27.2 bhp மற்றும் 41.3 Nm செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை பொருத்த வரை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக கிளாசிக் மாடல்கள் இருக்கிறது.