புரோ கபடி - பாட்னா பைரேட்சை தோற்கடித்தது உ.பி. யோதா

பெங்களூருவில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை 41 -29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது உபி யோதா அணி.
பாட்னா பைரேட்ஸ் வீரர் பர்தீப் நர்வாலை மடக்கிப் பிடிக்கும் உபி யோதா வீரர்
பாட்னா பைரேட்ஸ் வீரர் பர்தீப் நர்வாலை மடக்கிப் பிடிக்கும் உபி யோதா வீரர்
Published on

பெங்களூரு:

புரோ கபடி போட்டி 7-வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று இரவு நடந்த 75-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன், யு மும்பா அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே உ.பி. யோதா அணி வீரர்கள் விரைவில் புள்ளிகள் எடுத்தனர். இரண்டாவது பாதியில் பாட்னா பைரேட்ஸ் சிறப்பாக ஆடினாலும் புள்ளிகள் எடுக்கவில்லை.

இறுதியில், பாட்னா பைரேட்ஸ் அணியை 41 -29 என்ற புள்ளிக்கணக்கில் உபி யோதா அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் உ.பி. யோதா அணி ஏழாம் இடத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com