

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பொருட்கள் விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
அவ்வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ‘கோனோட்டரி 8’ என்ற மிகப்பெரிய ஆளில்லா விண்கலம் மூலம் பொருட்களை அனுப்ப ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டது.
இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 11-ம் தேதி தனேகாஷிமா தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்கலத்தை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பேட்டரிகள், ஆய்வுக்கு தேவையான உபகரணங்கள் என 5.3 டன் எடையுள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.