மத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்

மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடிக்கு கொரோனா சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
மந்திரி சுரேஷ் அங்காடி
மந்திரி சுரேஷ் அங்காடி
Published on

புதுடெல்லி:

மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி கடந்த 11ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடிக்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4-வது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி ஆவார்.

கர்நாடகாவின் பெலகாவி தொகுதியில் இருந்து 4 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com