U19 உலகக்கோப்பை: இங்கிலாந்து, வங்காள தேச அணிகள் வெற்றி

U19 உலகக்கோப்பை இன்றைய லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காள தேச அணிகள் வெற்றி பெற்றன. #U19CWC #ENGU19 #BANU19
U19 உலகக்கோப்பை: இங்கிலாந்து, வங்காள தேச அணிகள் வெற்றி
Published on

டாஸ் வென்ற நமிபியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் தாக்குப்பிடித்த நமிபியா 9 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ப்ரூக் 59 ரன்களும், ஜேக்ஸ் 73 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் இதே பிரிவில் இடம்பிடித்துள்ள வங்காள தேசம் - கனடா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்தது. தாவித் ஹ்ரிடாய் 122 ரன்கள் அடித்தார். அபிஃப் ஹொசைன் அரைசதம் அடித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com