U19 கிரிக்கெட்- இலங்கைக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா

19 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. #U19Cricket #ArjunTendulkar
U19 கிரிக்கெட்- இலங்கைக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா
Published on

பின்னர் இந்திய இளைஞர்கள் பேட்டிங் செய்தார்கள். டைட் (113), படோனி (185 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 589 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் செனாரத்னே 6 விக்கெட் வீழ்த்தினார்.

345 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை இளைஞர்கள் 2-வது இன்னிங்சை தொடங்கினார்கள். அந்த அணியின் தொடக்க வீரர் பெர்னாண்டோ 104 ரன்களும், நுவானிது பெர்னாண்டோ 78 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 324 ரன்கள் ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்திய இளைஞர்கள் அணி இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சில் ஜங்க்ரா 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் அறிமுகமானார். அவர் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com