புரோ கபடி லீக் - தெலுங்கு டைடன்சை வீழ்த்தி வெற்றி பெற்றது யு மும்பா

புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா அணி அபார வெற்றி பெற்றது. #ProKabaddi #UMumba #TeluguTitans
புரோ கபடி லீக் - தெலுங்கு டைடன்சை வீழ்த்தி வெற்றி பெற்றது யு மும்பா
Published on

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், யு மும்பா அணியும் மோதின. 

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே யு மும்பா அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அந்த அணியின் புள்ளிகள் உயர்ந்து வந்தது.

யு மும்பா அணியினரின் ஆட்டத்துக்கு முன்னால் தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் திணறினர். ஆட்டத்தின் இறுதியில் யு மும்பை அணி சிறப்பாக செயல்பட்டதால், 41- 20 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைடன்சை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த தொடரில் யு மும்பா அணி தனது 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. #ProKabaddi #UMumba #TeluguTitans

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com