அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் சுட்டு கொலை

அமெரிக்காவின் மேரிலாண்ட் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர் எனவும், துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் சுட்டு கொல்லப்பட்டான் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் சுட்டு கொலை
Published on

வாஷிங்டன்:

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் இருந்து சாலை வழியே சுமார் 90 நிமிட பயண தூரத்தில் மெரிலான்ட் மாநிலம் அமைந்துள்ளது,

இம்மாநிலத்துக்கு உடபட்ட செயின்ட் மேரிஸ் கவுன்ட்டியில் உள்ள கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஒரு மாணவி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், துப்பாக்கி சூடு நடத்திய மாணவரை பாதுகாப்புக்காக இருந்த போலீசார் சுட்டுக் கொன்றனர் எனவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் பள்ளிகளில் 16 முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com