ஜம்மு காஷ்மீர் - பட்காம் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on: 

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் அரிபாக் மச்சமாஎன்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

பாதுகாப்பு படையினரைக் கண்டதும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் நடமாட்டத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com