கனடா விமான நிலையத்தில் விமானங்கள் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

கனடா விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானங்கள் மோதி தீப்பிடித்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கனடா விமான நிலையத்தில் விமானங்கள் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
Published on

டொராண்டோ:

கனடா தலைநகர் டொராண்டோவில் பியர்சன் விமான நிலையம் உள்ளது. அங்கு மெக்சிகோவில் இருந்து வந்த வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரை இறங்கியது. இதில் 168 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகள் இருந்தனர். விமானத்தில் இருந்து கீழே இறங்க அனைவரும் தயாராக இருந்தனர்.

அப்போது அருகே காலியாக இருந்த சன்விங் நிறுவன விமானம் மீது மோதியது. இதில் வெஸ்ட்ஜெட் விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் விமான நிலையத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் விரைந்தனர். அதற்குள் விமானத்தின் அவசர வழிகள் திறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதனால் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com