

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா பகுதியில் இந்திய விமானப்படை முகாம் அமைந்துள்ளது. இன்று முகாமில் இருந்து விமானப்படை வீரர்கள் வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
திடீரென அந்த வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 2 விமானப்படை வீரர்கள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகன விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #JammuKashmirAccident