ரஷ்யா ராணுவ தளத்தில் வெடி விபத்து - இருவர் பலி

ரஷ்யா நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள ராணுவ மையத்தில் ஏவுகணை பரிசோதனையின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலியாகினர்.
ரஷ்யா ராணுவ தளத்தில் வெடி விபத்து - இருவர் பலி
ரஷ்யா ராணுவ தளத்தில் வெடி விபத்து - இருவர் பலி
Published on

மாஸ்கோ:

ரஷ்யா கடந்த சில நாட்களாக அதன் ராணுவ மையத்தில் ஏவுகணைகள், ஆயுத உபகரணங்கள் மற்றும் வெடி பொருட்கள் சோதனை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட சோதனையில் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், ஏவுகணை பரிசோதனை மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்துள்ளது, இதில் இரு தொழில்நுட்ப வல்லுநர்கள் உயிரிழந்தனர், பாதுகாப்பு துறை ஊழியர்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்துள்ளனர் என தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com