

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வீகோ ஸ்கூட்டர் விலையில் இருந்து ரூ.2,000 குறைப்பதாக அறிவித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் தனது வாகனங்களின் விலையை அதிகரித்து வரும் நிலையில் டிவிஎஸ் தனது ஸ்கூட்டர் மாடலின் விலையை குறைத்துள்ளது.
டிவிஎஸ் வீகோ புதிய விலையை ரூ.50,165க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக டிவிஎஸ் வீகோ விலை ரூ.52,165-க்கு (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விற்பனை செய்யப்பட்டது. டிவிஎஸ் வீகோ டிஸ்க் வேரியண்ட் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
டிவிஎஸ் வீகோ டிஸ்க் வேரியண்ட் விலை ரூ.53,083-க்கு (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு மூலம் டிவிஎஸ் வீகோ விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது பிப்ரவரி 2018 விற்பனை குறைந்துள்ளது.
டிவிஎஸ் ஜூப்பிட்டர் விற்பனை வீகோவை பின்னுக்குத்தள்ளியிருப்பதாக கூறப்படுகிறது. டிவிஎஸ் வீகோ மாடலில் 109.7சிசி ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பிஹெச்பி பவர் மற்றும் 8.4 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது.