நம்பிக்கை வாக்கெடுப்பின்போது உண்மையான சிலிப்பர் செல் யார் என்று தெரியும்: டி.டி.வி.தினகரன்

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது உண்மையான சிலிப்பர் செல் யார் என்று தெரியும் என டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது உண்மையான சிலிப்பர் செல் யார் என்று தெரியும்: டி.டி.வி.தினகரன்
Published on

சென்னை:

பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் என்று ஆதரவு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர சசிகலாதான் காரணம். அதை அமைச்சர் செல்லூர் ராஜு உணர்த்தி இருக்கிறார். அவர் மதுரைக்காரர். அதனால் தான் மன சாட்சியுடன் கூறி இருக்கிறார்.

‘சிலிப்பர் செல்’லின் சேம்பிள்தான் இப்போது வந்துள்ளது. எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது உண்மையான ‘சிலிப்பர் செல்கள்’ யார் என்று தெரிய வரும்.

என்னுடைய குரல் மாதிரியை சோதிக்க வேண்டும் என்றும் அதற்காக விசாரணைக்கு வர வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள்.

அது என்னுடைய குரல் இல்லை. ஒட்டுக் கேட்கப்பட்ட போன் உரையாடலுக்காக நான் குரல் சோதனைக்கு போக மாட்டேன்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com