துரோக அரசாங்கத்தை வீழ்த்த தியாகம் போராடுகிறது - டி.டி.வி தினகரன் பளீர் பேட்டி

தமிழகத்தில் நடந்து வரும் துரோக ஆட்சியை வீழ்த்துவதற்காக தியாகத்துடன் போராடி வருவதாக அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
துரோக அரசாங்கத்தை வீழ்த்த தியாகம் போராடுகிறது - டி.டி.வி தினகரன் பளீர் பேட்டி
Published on

தேனி:

தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “ அதிமுகவில் உள்ள 122 எம்.எல்.ஏ.க்களும் எனக்கு ஆதரவாளர்கள்தான், பதவிக்காக ஒரு சிலர் செயல்பட்டுவருகின்றனர். தமிழக அமைச்சர்கள் 90

சதவிகிதம் பேர் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்களே. தமிழக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையிலே புதுச்சேரியில் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர்.

தமிழகத்தில் துரோக ஆட்சிக்கும் தியாகத்திற்கும் யுத்தம் நடைபெற்று வருகிறது. கட்சியை காப்பாற்றவே தற்போது ஒன்று சேர்ந்துள்ளோம். இந்த துரோக அரசை வெல்ல காத்திருக்கிறோம். கட்சியை உடைத்து, சின்னத்தை முடக்கி, பதவிக்காக யாசகம் செய்துள்ள பன்னீர் செல்வத்துடன் சேர்ந்த்துள்ளது துரோக நடவடிக்கை.

மு.க.ஸ்டாலினும் தானும் சேர்ந்து ஆட்சியமைப்போம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமன்யன் சுவாமி கூறியுள்ளது அவரது சொந்த கருத்து.

இவ்வாறு டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com