‘அ.தி.மு.க. அம்மா’ பெயரை பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்போம்: டிடிவி தினகரன்

‘அ.தி.மு.க. அம்மா’ பெயரை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். #TTVDhinakaran #ADMKAmma
‘அ.தி.மு.க. அம்மா’ பெயரை பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்போம்: டிடிவி தினகரன்
Published on

கோத்தகிரி:

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் இன்று கோத்தகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கட்சி தொடங்குவது உட்பட பல விஷயங்கள் பரிசீலனையில் உள்ளது. ‘அ.தி.மு.க. அம்மா’ பெயரை பயன்படுத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்படும். இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்டெடுப்போம். சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் எங்களுடன் இணைவார்கள்.

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றிபெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்ததால் மக்கள் என்னை வெற்றி பெற செய்தனர். 

அ.தி.மு.க.வின் குழப்பத்திற்கு, மத்திய அரசு தான் காரணம். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியேறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMKAmma #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com