ஆரோவில் பண்ணை வீட்டில் தினகரன் பொங்கல் கொண்டாட்டம்

ஆரோவில் உள்ள பண்ணை வீட்டில் டி.டி.வி.தினகரன் தனது குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும் கோ பூஜையும் நடைபெற்றது.
ஆரோவில் பண்ணை வீட்டில் தினகரன் பொங்கல் கொண்டாட்டம்
Published on

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு பண்ணை வீடு உள்ளது. இந்த வீடு பல ஏக்கர் நிலபரப்பில் முந்திரி காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

சமீபத்தில் இந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதன்பிறகுதான் தினகரனுக்கு இங்கு பண்ணை வீடு இருப்பது வெளியே தெரியவந்தது.

இந்த பண்ணை வீட்டுக்கு நேற்று தினரகன் தனது குடும்பத்துடன் வந்தார். அவரது மனைவி, மகள் மற்றும் மாமனார் வீட்டினர் வந்திருந்தனர்.

அவர்கள் அங்கு வீட்டு முன்பு பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். மேலும் கோ பூஜையும் நடைபெற்றது. இதில் பண்ணை வீட்டின் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வேறு ஆட்கள் யாரையும் உள்னே அனுமதிக்கவில்லை. #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com