கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மூதாட்டியை கொல்ல முயற்சி- பெண் கைது

திருப்பூர் அருகே கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மூதாட்டியை கொல்ல முயன்ற பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி அடுத்த சின்னையம் கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 70). இவரது பக்கத்தை வீட்டை சேர்ந்தவர் பொன்னம்மாள் (67). இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் செல்லம்மாளுக்கும், பொன்னம்மாளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்க சென்றனர். செல்லம்மாள் தூங்கி விட்டார்.

ஆனால் பொன்னம்மாளுக்கு ஆத்திரம் தீரவில்லை. கொதிக்க கொதிக்க தண்ணீரை சுட வைத்தார். நன்கு கொத்தித்ததும் தூங்கி கொண்டு இருந்த செல்லம்மாள் முகத்தில் ஊற்றினார். முகம் மற்றும் உடல் வெந்த செல்லம்மாள் அலறி சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூதாட்டியை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் செல்லம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பொன்னம்மாள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com