வாஷிங்டன் நகரில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்த ஆசைப்படும் டிரம்ப்

பிற நாடுகளைப்போல அமெரிக்காவின் தலைநகரிலும் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்த விருப்பப்பட்டுள்ள டிரம்ப், இது தொடர்பாக ராணுவ தளபதிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
வாஷிங்டன் நகரில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்த ஆசைப்படும் டிரம்ப்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக கடந்தாண்டு பதவியேற்ற டிரம்ப் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது, பாரீஸ் நகரில் நடந்த போர் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். பிரான்ஸ் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பை ரசித்த டிரம்ப், தற்போது அமெரிக்காவிலும் அது போன்ற அணிவகுப்பை நடத்த விருப்பப்பட்டுள்ளார்.

பொதுவாகவே, ஏதாவது போரில் பங்கேற்று வெற்றி பெற்ற பின்னர் தலைநகர் வாஷிங்டனில் ராணுவ வீரர்கள் வெற்றி அணிவகுப்பை நடத்துவர்கள். சிவில் போர், ஈராக் உடனான போர் ஆகியவற்றுக்கு பின்னர் பிரம்மாண்ட அணிவகுப்பை வீரர்கள் நடத்தினர்.

இந்நிலையில், வீரர்கள் மற்றும் அமெரிக்க ராணுவத்தை பெருமைப்படுத்தும் விதமாக தலைநகரில் ஏன் ராணுவ அணிவகுப்பு நடத்தக்கூடாது? என பெண்டகன் தலைவரிடம் டிரம்ப் கேட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், முப்படை தளபதிகளிடமும் டிரம்ப் இது தொடர்பாக ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் பெண்டகன் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டிரம்ப்பின் இந்த செயல்பாட்டை விமர்சித்துள்ள ஜனநாயகக்கட்சி “எச்சேத்திகார அரசுகள் செய்வது போன்ற செயல் இது” என விமர்சித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com