மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை தோல்வி

வியட்நாமின் ஹனோய் நகரில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #VietnamSummit
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை தோல்வி
Published on

வாஷிங்டன்:

வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் நேற்று சந்தித்தனர். அவர்கள் வியட்நாம் அரசு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் பங்கேற்றனர்.

நேற்று காலை மீண்டும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பில் அணு ஆயுதத்தை முழுமையாகக் கைவிடுவது மற்றும் பொருளாதார தடைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருதரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என வடகொரியா முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது. இதையடுத்து டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் இடையிலான 2–வது உச்சிமாநாடு தோல்வியில் முடிந்துள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #VietnamSummit

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com